பிரபல நேபாள் IPL கேப்டன் மீது பாய்ந்த வன்கொடுமை புகார்.! சந்தீப் லமிச்சேன் வெளியிட்ட தன்னிலை விளக்கம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டியில் ஆடிய பிரபல நேபால் கிரிக்கெட் கேப்டன் மீது பாலியல் புகார் பாய்ந்திருக்கிறது.
Also Read | 71 ஆவது Century அடித்த கோலி.. உடனே மைதானத்தில் இருந்த வயதான ரசிகர் செய்த காரியம்.. இணையத்தை வென்ற வீடியோ!!
ஐபிஎல் போட்டியில் ஆடிய பிரபல நேபால் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் மீது கௌசலா பெருநகர காவல் துறையிடம் இளம்பெண்ணர் ஒரு புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த புகாரியில் அவருடைய தீவிர ரசிகையான அந்த பெண் மீது அவர் தரப்பில் இருந்து பாலியல் வன்கொடுமை தொந்தரவு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கொடுத்து வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே அவரை கைது செய்வதற்கான வாரண்டு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை முடிந்த பின்னர் அவசிய பட்டால் அவர் கைதாகவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதே சமயம் இதற்கு மறுப்பு தெரிவித்து சந்தீப் லமிச்சேன் பதிவு செய்திருக்கிறார்.
அதில், “நான் ஏதும் அறியாதவன். நேபாளின் சட்ட திட்டங்களின் மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றேன். நான் இந்த கிரிக்கெட் பிரீமியர் லீக்-களிலிருந்து முழுமையாக விடுப்பு எடுத்துக் கொண்டு நாட்டுக்கு செல்கிறேன். எல்லாவற்றையும் நான் சந்திக்க தயார். ஒரு நேர்மையான அப்பாவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் மற்றும் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.