இனிமேல் நமக்கு 'சைக்கிள்' தாங்க சரிப்பட்டு வரும்...! சன்னி லியோன் 'ஷேர்' செய்த பதிவு...! - டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்பெல்லாம் தங்கம் விலை ஏறுமா இறங்குமா என பார்க்கும் மக்கள் தற்போது பெட்ரோல் விலையை தினமும் பார்க்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை செஞ்சுரி போட்டுவிட்ட நிலையில் பல வாகன ஓட்டிக்களும் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.
அதோடு பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் சிலர் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசளிக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. இனி பெட்ரோல் போட லோன் எடுக்க வேண்டும் என தினமும் பல மீம்ஸ், ட்ரோல்ஸ் வீடியோ என விதவிதமாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விற்கும் விலைக்கு இனி சைக்கிள் தான் சரிப்பட்டு வரும் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?.. சன்னி லியோன் சைக்கிள் குறித்து போட்ட ட்வீட்டிற்கு கீழே சென்று 'நீங்கள் ரொம்ப லேட்டு, எங்கண்ணா எப்பவோ சைக்கிளுக்கு மாறிவிட்டார் எனவும், ஓட்டு போடவே அவர் சைக்கிளில் தான் வந்தார். இதைப்பற்றி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை பார்க்கவில்லையா' என அரக்கப்பரக்க தேர்தல் விவாகரங்களை கூறியுள்ளனர்.
ஆனால் இது சன்னி லியோனினுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான்.
When it's finally crossed ₹100...you gotta take care of your health!!
#Cycling is the new #GLAM 🚴♀️⛽️ pic.twitter.com/M6QSCnfLkD
— sunnyleone (@SunnyLeone) July 8, 2021

மற்ற செய்திகள்
