'நம்ம பேக்கரியில கேக் வாங்க...' 'ஆட்கள எப்படி வரவைக்குறதுன்னு யோசிச்சப்போ தான்...' 'இந்த ஐடியா தோணுச்சு...' - வேற லெவல் ஆஃபர் அறிவித்த பேக்கரி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் பெட்ரோல் விலை கிடுகிடுவென ஏறிகொண்டிருக்கும் வேளையில் கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பேக்கரியில், 1 கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை திறப்பு விழா ஆஃபராக அறிவித்துள்ளார் பேக்கரி உரிமையாளர் சகாயராஜ்.
இதுகுறித்து கூறும் சகாயராஜ், 'எங்களுடைய பேக்கரி கடை திறப்பின் போது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் சலுகையை அறிவிக்க வேண்டும் என திட்டமிருந்தோம்.
அப்போது தான் மற்ற இலவசங்களை வழங்கினால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது என எண்ணிக்கொண்டிருக்கையில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுத்தால் என்ன என்று நினைத்து 'ஒரு கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்' என அறிவித்தோம். அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இது ஒரு சூசகமான வழி' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சலுகை ஒரு மாதம் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் பேக்கரி உரிமையாளர் சகாயராஜ்.

மற்ற செய்திகள்
