"என்னப்பா இவங்க பேரு எல்லாம் எக்ஸாம் 'ஃபார்ம்'ல போட்ருக்கே??... அதுவும் எங்க போட்ருக்கான்னு பாருங்க!!..." சர்ச்சையை ஏற்படுத்திய 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலம் முஷாஃபர்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் தனது தேர்வு அனுமதி அட்டையில் பெற்றோர்கள் பெயருக்கான இடத்தில் பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹாஸ்மி மற்றும் சன்னி லியோன் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்திலுள்ள பீம் ராவ் அம்பேத்கர் பழ்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படிக்கும் குந்தன் என்ற அந்த மாணவர், தந்தை பெயர் எழுத வேண்டிய இடத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி பெயரையும், தாய் பெயர் எழுத வேண்டிய இடத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் கல்லூரியின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இதனைக் கண்டு குழப்பத்தில் உறைந்து போயுள்ளனர். 'இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். சம்மந்தப்பட்ட மாணவர் தான் இந்த செயலுக்கு பொறுப்பேற்க வேண்டும். விசாரணையின் அறிக்கையின் அடிப்படையைக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என அந்த பழ்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அந்த படிவத்தில் இடம்பெற்றிருந்த மாணவரின் ஆதார் கார்டு எண் மற்றும் தொலைபேசி எண்ணைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் அதிகம் வைரலான நிலையில், நடிகர் இம்ரான் ஹாஷ்மி இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
I swear he ain’t mine 🙋🏼♂️ https://t.co/ARpJfqZGLT
— Emraan Hashmi (@emraanhashmi) December 9, 2020
இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போல ஒரு பல்கலைகழகம் வெளியிட்ட மாணவர்களின் தரவரிசை பட்டியலில் சன்னி லியோன் பெயர் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
