'என்ன சமாளிக்கவே முடியல இல்ல'... 'அடுத்தடுத்து உருமாற்றம்'... 30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 09, 2021 02:15 PM

கடந்த 4 வாரங்களில் மட்டும் லம்படா வகை வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி உள்ளது.

Lambda: All You Need To Know About Latest Covid Variant

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. முதல் அலை முடிந்து, 2-வது அலையின் தாக்கம் சற்று தணிந்து வரும் நிலையில், தற்போது 3வது அலை பல நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 18 கோடியே 60 லட்சத்து 4 ஆயிரத்து 716 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.கொரோனா பரவத்தொடங்கி 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையாமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது. கொரோனா முதல் அலையின் போது ஆல்பா என்ற கொரோனா வைரஸ் காணப்பட்டது.

Lambda: All You Need To Know About Latest Covid Variant

அதன்பிறகு உருமாறிய டெல்டா வகை வைரஸ் கொரோனா தொற்றின் 2-வது அலையை ஏற்படுத்தியது. ஆல்பா வைரஸ் பரவிய முதல் அலையின்போது உயிரிழப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் 2-வது அலையின்போது டெல்டா வைரஸ், ஆல்பா வைரசை விட வேகமாகப் பரவி அதிக பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அதன்பிறகு மீண்டும் உருமாறிய கொரோனா டெல்டா பிளஸ் என்று அழைக்கப்பட்டது.

அது டெல்டா வைரசை விட வேகமாகப் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்தியாவிலும் சிலர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறி ‘லம்படா’ என்ற புதிய வைரசாக உருவெடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் டெல்டா வைரசை விட அதிவேகமாகப் பரவி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Lambda: All You Need To Know About Latest Covid Variant

தற்போது இங்கிலாந்து, பெரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் லம்படா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ‘லம்படா வகை வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. டெல்டா வைரசை விட அதிக வேகத்தில் பரவும் ஆற்றல் லம்படா வகை கொரோனாவுக்கு இருக்கிறது’ என்று எச்சரித்துள்ளனர்.

Tags : #LAMBDA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lambda: All You Need To Know About Latest Covid Variant | World News.