BREAKING: உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.. முலாயம் சிங் நவம்பர் 22, 1939 இல் பிறந்தார். உத்தரப் பிரதேசத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராக இருந்தவர். மேலும் மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சராகவும் முலாயம் சிங் பணியாற்றியுள்ளார். 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை மக்களவை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நிலை குன்றிய நிலையில் அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாக சமாஜ்வாதி கட்சி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், இன்று முலாயம் சிங் யாதவ் மரணமடைந்ததாக அவரது மகனும், சமாஜ்வாதி கட்சி பிரமுகருமான அகிலேஷ் யாதவ் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
