“இந்த 4 கிலோ மணலும்... அப்படியே தங்கமா மாறும் பாருங்க” - கூட்டாளிகளுடன் சேர்ந்து நண்பனே ஏமாற்றிய கதை... லட்சங்களை இழந்த சோகத்தில் நகை வியாபாரி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமணலை உருக்கினால் தங்கமாக மாறும் என நான்கு கிலோ மணலை ரூ.50 லட்சத்துக்கு விற்று ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரில் நகைக்கடை நடத்திவரும் நகைக்கடைக்காரரிடம் ஒரு வருடத்திற்கு முன்பு நகைவாங்கியுள்ளார். இதன்பின்னர் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அந்த நபர் நகைக்கடைக்காரரின் குடும்பத்தினருடன் பழகி, அவரின் வீட்டுக்கும் பால் பொருட்கள், அரிசி மற்றும் பிற பொருட்களை வாங்கி தருவது உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரும் அவரின் நண்பர்கள் இருவரும் சேர்ந்து, நகைகடைக்காரரிடம் ஒரு புதிய மோசடி விஷயத்தை கூறியுள்ளனர். அதாவது, அவர்கள் வைத்திருக்கும் மணலை சூடேற்றினால் தங்கமாக மாறும் என ஆசையை தூண்டியுள்ளனர்.
இதனை நம்பிய நகைக்கடைக்காரரும் 4 கிலோ மணலை சுமார் ரூ.49.92 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். மேலும், இந்த மணலை வங்காளத்திலிருந்து பெற்றதாகவும், மணலை எரித்ததும் அது தங்கமாக மாறும் என்றும் நகைக்கடைக்காரரிடம் கூறியுள்ளனர்.
மணலை வாங்கிய நகைக்கடைக்காரர் நடுஇரவில் மணலுக்கு தீ வைத்தபோது தங்கம் கிடைக்கவில்லை. தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தார். குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.