'பாலியல் குற்றவாளிகளுக்கு...' 'கெமிக்கல் யூஸ் பண்ணி...' - 'அந்த' தண்டனையை வழங்க பாகிஸ்தான் ஒப்புதல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனைக்குரிய சட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலியல் வன்கொடுமை என்பது தினம் நடக்கும் நிகழ்வாக உள்ளது. சில நாடுகள் இக்கொடுமைகளை செய்யும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனைகளை வழங்கிவருகின்றன. சில நாடுகள் ஆண்மை இழப்பு தண்டணையையும் நிறைவேற்றி வருகிறது. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் சேர உள்ளது எனலாம்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம், தனது இரு குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆண்மைநீக்க தண்டனை வழங்குவதே இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதை நிறைவேற்றும் விதமாக, பாகிஸ்தான் அரசு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இரசாயனம் மூலமாக நீக்கும் சட்டத்தை உருவாக்கி, அந்தநாட்டின் அதிபர் ஒப்புதலுக்காக அனுப்பியது.
மேலும் தற்போது அச்சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதலும் அளித்து, பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்
