'திடீரென தோளில் வந்து அமர்ந்த புறா...' 'அதோட காலில் கட்டியிருந்த ஒரு துண்டுசீட்டு...' 'என்ன தான் எழுதிருக்குன்னு பிரிச்சு பார்த்தப்போ...' - உடனே புறா மேல கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்டர் பண்ணியாகணும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலம் அம்ரிட்சரை அடுத்த ரோராவாலா போஸ்ட் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து பறந்து வந்த புறா ஒன்று எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் தோளில் அமர்ந்தது.
அப்போது அந்த புறாவின் காலில் ஒரு துண்டுச் சீட்டு இருந்ததை பாதுகாப்பு படை வீரர் கவனித்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த சந்தேகம் உருவானது. துண்டு சீட்டினுள் என்னதான் உள்ளது என்பதை கான்பதர்காக அந்த சீட்டினை எடுத்து பிரித்து பார்த்தார். அப்போது அதில் ஒரு செல்பேசி எண் இருந்தது.
உடனடியாக உள்ளூர் கங்கர் காவல்நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் சார்பில் ஒரு புகார் எழ்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டது, மேலும் அந்த புறாவையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். புகாரில் இது குறித்து உடனடியாக விசாரணை செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் துருவ் தாஹியா, புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் புறா ஒரு பறவை என்பதால் அதன் மீது கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்டர் பண்ண முடியுமா என்று என எனக்கு தெரியவில்லை. ஆயினும் இது தொடர்பாக என்ன பண்ணலாம் என சட்டத்துறையை அணுகியுள்ளோம் என தெரிவித்துள்ளார். புறாவின் காலில் இருந்த துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருந்த செல்பேசி எண் யாருடையது, யார் எழுதி இதை அனுப்பி வைத்தார்கள் என விசாரித்து வருகிறோம்.
தற்சமயம் அந்த புறா கங்கர் போலிஸ் ஸ்டேசனில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கூட புறாக்கள் இது போன்று பாகிஸ்தான் உள்ளிட்ட பிற பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளன. ஆனால் இதுவரை எந்த புறாக்களின் மீதும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி வேலை ஏதேனும் உள்ளதா என தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.