''கொரோனாவோட அடுத்த வெர்சன் வந்திடுச்சி...' 'இந்தியால மட்டும் 771 பேருக்கு புதிய கொரோனா வைரஸ்...' - அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் சுமார் 771 பேருக்கு மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இதுவரை ஒரு முடிவு வந்ததாக இல்லை.
இந்நிலையில் புதிதாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன்காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 10,787 பேரில், 771 பேருக்கு மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை கொரோனா நாட்டின் 18 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
தற்போது புதியவகை கொரோனா கண்டறியப்பட்ட 771 பேரில், 736 மாதிரிகள் இங்கிலாந்து நாட்டில் பரவிய உருமாறிய கொரோனா வகையை சேர்ந்தவை எனவும், 34 பேரின் மாதிரிகள் தென் ஆப்பிக்காவில் பரவிய உருமாறிய கொரோனா வகையைச் சேர்ந்தவை எனவும் ஒரு மாதிரி மட்டும் பிரேசில் நாட்டுடன் தொடர்புடையது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Genome Sequencing by INSACOG shows variants of concern and a Novel variant in India.https://t.co/hs3yAErWJR pic.twitter.com/STHjcMnkMh
— Ministry of Health (@MoHFW_INDIA) March 24, 2021