'பேங்க்ல ரூ.13,500 கோடி கடன் வாங்கிட்டு...' மோசடி செய்த 'இந்த நபர்' யார் தெரியுமா...? - இப்போ 'இந்த' நாட்டுல தான் பதுங்கி இருக்காராம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து தப்பிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி திடீரென மாயமாக மறைந்ததாக ஆன்டிகுவா போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார்.
அதன்பின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2018 ஆம் ஆண்டு மெகுல் சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி ஆகிய இருவரும் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து இந்தியாவை விட்டு தப்பி ஓடினர்.
இதில் மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் பதுங்கி இருந்தார். அத்துடன் அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றதாகவும் கூறப்பட்டது.
மெகுல் சோக்ஸியின் கூட்டாளியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் உள்ள நிலையில், மெகுல் சோக்சி மீண்டும் வேறொரு நாட்டிற்கு தப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆன்குடிவா நாட்டில் இருந்து 2 நாட்களுக்கு முன்னர் மெகுல் சோக்சி மாயமானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தப்பி ஓடிய மெகுல் சோக்சி, கியூபாவில் தஞ்சம் அடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.