'ரொம்ப சவாலான விஷயம்'...'ஆனா சூப்பரா பண்ணிட்டீங்க'...'பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 13, 2019 01:18 PM
சயித் செஹ்ரிஸ் மற்றும் நித்யா என்ற இரண்டு அதிகாரிகளை பற்றி தான் காஷ்மீரில் பரவலான பேச்சு நிலவி வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, ஸ்ரீநகரில் தகவல்தொடர்பு இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவரான இவர் இந்திய ஆட்சி பணி தேர்வினை எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

இந்நிலையில் காஷ்மீரில் நிலவிய ஆசாதாரண சூழ்நிலைகிடையே பதவி ஏற்ற சயித் செஹ்ரிஸ், ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொது தொலைபேசிகள் மூலம் தொடர்புகொள்ள உதவி செய்துள்ளார். தொலைபேசி, இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கரின் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.
அதே போன்று சண்டிகரை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான நித்யா என்பவர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மிகவும் சவாலான பாதுகாப்பு பணியினை திறம்பட மேற்கொண்ட இவர், தால் ஏரி, ஆளுநர் மாளிகை, முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்தார். சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
