'இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு'!.. ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் 'குட் நியூஸ்'!.. அதிரடி காட்டுமா சீரம் நிறுவனம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (DCGI) அனுமதி அளித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குறிப்பிட்ட நபருக்கு வேறு சில பிரச்னைகள் இருந்ததாக இந்தியா மற்றும் இங்கிலாந்தின், தடுப்பூசி தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் அளித்த பரிந்துரையை ஏற்று, விதிகளை பின்பற்றி சீரம் நிறுவனம் மீண்டும் தடுப்பூசி சோதனையை தொடங்கலாம் என, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தடுப்பு மருந்து பரிசோதனையில் கலந்துகொள்வோரின் தேவையான தகவல்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும். அடுத்ததாக, தன்னார்வலர்களுக்கு என கூடுதல் பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். இறுதியாக, அவர்களை அவசர நிலையில் தொடர்பு கொள்ள செல்போன் எண்களை பதிவு செய்திருக்க வேண்டும் என Data Safety Monitoring Board (DSMB) சீரம் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.