எனக்கு 'யாரும்' இல்ல...! 'எல்லாரும் என்ன கைவிட்டுட்டாங்க...' உடைந்து நொறுங்கி போன 'பாட்டிக்கு' இருந்த ஒரே ஆறுதல்...! - அவங்க செய்த 'காரியத்தால்' நெகிழ்ந்து போன குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலம், தாஹத்தைச் சேர்ந்தவர் மினாடி பட்னாயக். வயதான பெண்மணியான இவரது கணவர் கிருஷ்ண குமார் பட்னாயக் கடந்த வருடம் உயிரிழந்தார்.
இந்த பெரும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னரே அந்த பாட்டியின் அன்பு மகளும் இந்த வருடம் ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
எனவே உடைந்து போன உள்ளத்துடன் அவர் தனியாக வசித்து வந்தார். மேலும், உறவினர்கள் யாரும் இவருக்கு உதவ முன்வரவில்லை. ஆனால், அவருடைய கணவருக்காக 25 வருடங்களாக ரிக்ஸா ஓட்டிவந்த புத்தா சமால் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பாட்டியை கவனித்துக் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அந்த பாட்டி முடிவெடுத்து உள்ளார்.
இந்த நிலையில், எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் கவனித்துக் கொண்டு வந்த ரிக்சா ஓட்டுநர் புத்தா சாமலின் குடும்பத்திற்கு 3 அடுக்கு மாடிக்கொண்ட வீடு, மற்றும் அவரிடம் இருந்த தங்க நகைகள் என அனைத்து சொத்துக்களையும் புத்தாவின் குடும்பத்தினர் பெயருக்கு உயில் எழுதியுள்ளார்.
இதை அறிந்த ரிக்சா ஓட்டுநரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 'இப்படி ஒன்று நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் எப்போதும் போல் பாட்டியை நன்றாகப் பார்த்துக்கொள்வோம்' என புத்தா குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பணம், சொத்துக்காக சொந்த பெற்றோர்களையே தெருவுக்கு தள்ளுவது, கொலை செய்வது போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கும் இந்த சமூகத்தில், அனைத்து சொத்துக்களையும் ரிக்சா ஓட்டுநருக்கு எழுதிவைத்த பாட்டியின் அன்பு அனைவருக்கும் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.