கோடிகளை ‘தியாகம்’ செய்து... ‘பிரபல’ வங்கி எடுத்துள்ள ‘திடீர்’ முடிவு... ‘சூப்பர்’ அறிவிப்பால் ‘மகிழ்ச்சியில்’ வாடிக்கையாளர்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 11, 2020 07:10 PM

இனி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படாது என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

No Minimum Balance Needed For SBI Savings Bank Accounts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் தங்களுடைய கணக்கில் குறிப்பிட்ட இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்கள் என மாறுபடும் இந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காவிட்டால் அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படாது என  பாரத ஸ்டேட் வங்கி இன்று மாலை அறிவித்துள்ளது. மேலும் எஸ்எம்எஸ் சேவைக்கான கட்டணமும்  ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கியின் இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடிகளில் அபராதத்தொகை குவிந்துவந்த நிலையில், திடீரென வங்கி அபராதம் விதிப்பதை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ 1 லட்சத்திற்கும் குறைவான டெபாசிட் தொகைக்கும், அதற்கு மேலான டெபாசிட் தொகைக்கும் 3 சதவிகிதம் என ஒரே வட்டி சதவிகிதத்தை கடைப்பிடிக்க இருப்பதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Tags : #SBI #MINIMUMBALANCE #STATEBANKOFINDIA #SAVINGS #ACCOUNT