புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. கலெக்டர் போட்ட புது உத்தரவு.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நேரத்தை மேலும் ஒரு மணிநேரம் நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி அழகான கடற்கரைகள் மற்றும் எழில்மிகுந்த வீதிகளுக்கு பெயர்போனது. இதனாலேயே உள்ளூர் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர். பிரெஞ்சு கட்டடக்கலையையும், அழகழகான தெருக்களும் கண்களை வசீகரிக்க கூடியவை. அது மட்டும் அல்லாமல் புதுச்சேரியில் உள்ள மது கடைகளும் இங்கே பெரும்பான்மையான சுற்றுலாவாசிகள் குவிவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
சாதரண நாட்களிலேயே புதுச்சேரி சுற்றுலாவாசிகளால் நிரம்பி வழியும். அப்படி இருக்க புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் சொல்லவே வேண்டாம். புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளி நாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலாவாசிகள் வருவதுண்டு. இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் வழக்கத்திற்கு அதிகமாக ஹோட்டல் அறைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும், அறைகளின் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்திருப்பதாகவும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பேசிவந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இரவு 1 மணி வரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார் ஆட்சியர் வல்லவன். இந்நிலையில், வழிபாட்டு தளங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதால் இந்த நேரத்தை மேலும் ஒருமணி நேரம் நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அதாவது, நள்ளிரவு 2 மணி வரையில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதே வேளையில் புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுவார்கள் என புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்கரை பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முதல் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹோட்டல்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
