"பேஸ்புக்கில் இளம்பெண்ணுடன் பழக்கம்?".. கணவர் குறித்து மனைவிக்கு தெரிஞ்ச உண்மை.. அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களுக்கு முன், ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கான காரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை சேர்ந்தவர் தேவ்ராத் சிங் ராவத். இவருக்கு தற்போது 33 வயதாகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, மேட்ரிமோனி மூலம் அறிமுகமான பன்வெல் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவருடன் தேவ்ராத் சிங்கிற்கு திருமணமும் நடந்துள்ளது.
மேலும், தேவ்ராத் சிங் - பிரியங்கா தம்பதியருக்கு குழந்தை ஒன்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, பேஸ்புக் மூலம் நிகிதா என்ற பெண்ணுடன் தேவ்ராத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இடையே அறிமுகமாகி உள்ள நிலையில், சமீபத்தில் இவர்கள் காதலிக்கவும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், கடந்த ஆகஸ்ட் மாதம் நிகிதாவை தேவ்ராத் சிங் ஒரு கோவிலில் வைத்து திருமணமும் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கணவர் தேவ்ராத்தின் காதல் விவகாரம், ப்ரியங்காவிற்கு தெரிய வந்துள்ளது.. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ட்யூஷன் சென்டர் ஒன்றில் ஆசிரியையாக நிகிதா பணியாற்றும் நிலையில், அங்கே நேரில் சென்ற பிரியங்கா, அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் கணவரிடம் இருந்து விலகி இருக்கும் படியும் கூறிவிட்டு வந்துள்ளார்.
பிரியங்காவுக்கு எப்படியோ விஷயம் தெரிந்ததால், தேவ்ராத் மற்றும் நிகிதா ஆகியோர் அதிர்ச்சி திட்டம் ஒன்றையும் போட்டுள்ளனர். அதன்படி, பிரியங்காவை கொலை செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ள நிலையில், இதற்காக இரண்டு மாதங்கள் நிகிதா திட்டம் போட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல தளங்களில் கூலிப்படையை தேடிய நிகிதா, இறுதியில் ஒரு குழுவை தயார் செய்துள்ளார். தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரெயிலில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பிரியங்காவை நிகிதா நியமித்த ஆட்கள் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், தேவ்ராத் சிங்கிடம் விசாரித்த போது நிகிதா மற்றும் கூலிப்படை குறித்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, தேவ்ராத், நிகிதா உள்ளிட்ட 6 பேர் வரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.