தூக்கு போட்டு தற்கொலை!.. 'தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்'.. 'தோனியாகவே வாழ்ந்த நடிகரின் சோக முடிவு!'.. இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணம் அடைந்துள்ள செய்தி இந்தியாவையே உலுக்கியுள்ளது.

2016-ல் வெளிவந்த இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story)-யில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தூக்கு மாட்டி இறந்ததாகக் கூறப்படும் சுஷாந்த் சிங் ராஜ்புட், பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் என்பதும், இவருக்கு 34 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
