ஹோட்டல் ஓனரிடம் கேட்காமல் ‘சமோசா’ எடுத்து சாப்பிட்ட நபர்.. வாக்குவாதத்தின் முடிவில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹோட்டல் ஒன்றில் உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா எடுத்து சாப்பிட்ட நபருக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஹரி சிங் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு நேற்று மதுபோதையில் வந்த வினோத் அஹிர்வர் என்ற நபர் ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்காமல் சமோசாவை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரி சிங் அந்த நபருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ஹரி சிங், ஒரு குச்சியால் வினோத் அஹிர்வரின் தலையில் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகனை கைது செய்தனர். ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்காமல் சமோசா எடுத்து சாப்பிட்டதற்காக நபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
