'அவரு வயசுல பாதிக்கு மேல மக்களுக்காக வாழ்ந்திருக்காரு...' 'இது' கூட பண்ணலன்னா எப்படி...? - இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்திய ரெயில்வே நிர்வாகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய வாழ்நாளில் பாதி நேரத்தை தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்த மராட்டியத்தை சேர்ந்த கேசவ் நார்கர் பாபத் என்பவரை மத்திய ரயில்வே நிர்வாகம் அவரது ஓய்வு ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

மராட்டிய மாநிலம் புசாவல் பகுதியை சேர்ந்தவர் திரு.கேசவ் நார்கர் பாபத். கடந்த 1951ஆம் ஆண்டு அதாவது, மத்திய ரெயில்வே, இந்திய பென்னின்சுலா ரெயில்வே என்ற பெயரில் இயங்கி கொண்டிருந்த போது ரெயில்வே கார்டாக வேலை பார்த்த திரு.கேசவ், 1978-ம் ஆண்டு பணிஓய்வு பெற்றுயுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் முதலில் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு தான், விருப்ப ஓய்வு பெற்று ரெயில்வேயில் பணிக்கு சேர்ந்து உள்ளார். மேலும் அவர் 2-ம் உலகப்போரில் பங்கு பெற்று இருந்ததாகவும், போருக்காக பல நாடுகளுக்கு பயணம் செய்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்
இதில் என்ன சிறப்பு என்றால் தற்போது திரு.கேசவ் நார்கர் பாபத்திற்கு வயது 100. கடந்த 21-ந் தேதி 100 வயதை எட்டியுள்ளார். தன் வாழ்நாளில் பாதியளவிற்கு மேல் உழைத்த மூத்த ஊழியரான திரு.கேசவ் நார்கரை மத்திய ரெயில்வே கவுரவிக்க விரும்பி, மத்திய ரெயில்வே நிர்வாகம் அவரது ஓய்வு ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் புசாவல் கோட்ட மேலாளர் விகாஸ் குமார் மற்றும் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு பூங்கொத்து, இனிப்பு மற்றும் வாழ்த்து கடிதங்களை கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

மற்ற செய்திகள்
