சிக்னல் போட்டும் ஏன் ரயில் கிளம்பல..? கையில் உதவி லோகோ பைலட் கொண்டு வந்த பொருள் .. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடீ குடிப்பதற்காக பாதி வழியில் ரயிலை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் குவாலியர்-பரௌனி எக்ஸ்பிரஸ் (Gwalior-Barauni Express) ரயில், சிவன் (Siwan) ஸ்டேஷன் அருகே சென்றபோது திடீரென ரயில் நிறுத்தப் பட்டுள்ளது. அப்போது லெவல் கிராஸிங் மூடப்பட்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலையில் காத்துக் கொண்டிருந்தனர்.
கிரீன் சிக்னல் விழுந்த பின்பும் ரயில் செல்லாமல் இருந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என தெரியாமல் விழித்துள்ளனர். அப்போது உதவி லோகோ பைலட் அருகில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று டீ வாங்கி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த உதவி லோகோ பைலட் டீ உடன் ரயிலில் ஏறியதும் ரயில் கிளம்பியுள்ளது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடவே அது வைரல் ஆகியுள்ளது.
இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட ரயிலியின் லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/