'கொரோனா 3வது அலை... குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்'!.. 'அதுக்காக தான் 'இந்த' முடிவு எடுத்திருக்கோம்!.. எய்ம்ஸ் இயக்குநர் திட்டவட்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசிகள் பலவும் இங்கு வரவிருக்கிறது. அவற்றில் முக்கியமானவை ஃபைசரும், மாடர்னாவும் ஆகும்.

இவை இரண்டும், பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் போடும் வகையில் இருக்குமென்றும், அதன்மூலம், பல உயிர்களை நம்மால் காக்க முடியுமென பேட்டியளித்திருக்கிறார் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் முன்காப்பீடு அளிப்பதற்கு மத்திய அரசுக்கு எந்தத் தடையும் இருக்காது என்றும், அதனால் விரைவில் அவற்றுக்கு அவை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த முன்காப்பீடு அளிக்கப்பட்டவுடன், தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், அதன்மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர் ரந்தீர்ப் கலிரியா கூறியுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதை அடிப்படையாக வைத்து, அரசு தற்போது அவர்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும்போது, அவர்கள் எளிதில் நோய்க்கு எதிராகிவிடுவதால், நிச்சயம் அடுத்த அலை கொரோனாவை நாம் எளிதாக கடக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
அதுமட்டுமன்றி, கொரோனாவில் பாதிக்கப்படும் நபர்கள்தான், கேரியர்ஸாக இருப்பார்கள். அதாவது, கொரோனாவை பரப்புபவர்கள். ஆகவே, பாதிக்கப்படுபவர்களை குறைத்துவிட்டால், நோய்ப்பரவலும் குறைவாக இருக்கும். இந்த மருத்துவ உண்மையின் அடிப்படையில் பார்க்கும்போது, மூன்றாவது அலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, பல பெரியவர்களையும் நம்மால் காக்க முடியும் என்கிறார் மருத்துவர் ரந்தீர்ப் கலிரியா.
இவை இரண்டுக்கும் விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சத்திலிருந்து நேற்று முன்தினம் தகவல்கள் வெளிவந்தன. ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், பிரிட்டன், அமெரிக்கா உட்பட 40 நாடுகள் இவை இரண்டுக்கும் அனுமதி தந்திருக்கிறது.
முன்காப்பீடு என்பது, தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சட்டரீதியான தளர்வுகள் மற்றும் பொறுப்புத்துறப்பு உறுதி. இவற்றை பெற்றுவிட்டால், அவற்றின் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்படாமல் இருக்கும். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வேறெந்த தடுப்பூசிகளுக்கும், இந்த சலுகை கிடையாது. ஃபைசரும், மாடர்னாவும் இந்தியாவுக்கு தங்கள் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், அதற்கு அவற்றுக்கு இந்த சலுகைகள் தரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொடண்தற்கு இணங்க இந்த வசதி செய்துகொடுக்கப்படுகிறது.
ஃபைசர், மாடர்னா நிறுவனங்களைத் தொடர்ந்து கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் இதை கேட்டுள்ளது. தங்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவில் இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யப்படும் பிற தடுப்பூசி நிறுவனங்களுக்கும் இந்த வசதி செய்து தரப்பட வேண்டுமென சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது .
இந்தியாவில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை, இப்படியான விதிமுறைகள் தளர்தல் சரியாக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தளர்வுகளை முன்னிறுத்தி, வேறு சில வெளிநாட்டு தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.

மற்ற செய்திகள்
