’15 வயது சிறுமி ரேப் செய்து கொலை... இதுவரை, 10 பெண்களை ’கொடூரமாக’ கொன்ற காமுகன்...’ - ’ சீரியல் கில்லர்’ வழக்கில் ’கோர்ட்’ பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த வருடம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 42 வயதான கம்ருஸ்மான் சர்க்காருக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது கல்னா நீதிமன்றம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் சிங்கர்கோன் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் கம்ருஸ்மான் சர்கார். மேலும் சிறுமியின் நெற்றியில் பலமாக தாக்கியுள்ளார். பாதிக்கபட்ட பெண்ணின் தாய் வீட்டிற்கு வந்ததும், சிறுமி இரத்தவெள்ளத்தில் இருந்ததை கண்டு பதறியுள்ளார். மேலும் சிறுமி உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடலிலும் தலையிலும் ஏற்பட்ட கடும் காயத்தால் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தில் இறந்துள்ளார்
இந்நிலையில் நந்தன்காட்டின் டங்கபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் கமருஸ்மான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும் மருத்துவர்கள் அளித்த அறிக்கையில், சிறுமியின் நெற்றியில் எலும்பு முறிவு ஏற்பட்டது, அவளும் கழுத்தை நெரித்துள்ளனர் எனவும், மருத்துவ பரிசோதனையில் அவர் பலவந்தமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்பதை உறுதிப்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர் இரும்பு கம்பி போன்ற கடினமான பொருளால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 'செயின் மேன்' என அழைக்கப்படும் கம்ருஸ்மானுக்கு கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கல்னாவில் உள்ள நீதிமன்றம் தற்போது தூக்குத்தண்டனை அளித்துள்ளது. இதற்கு முன்பே 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகவும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இவர் மின்சாரத் துறை ஊழியர்களாகக் வேஷம் அணிந்து பெண்கள் தனியே இருக்கும் வீட்டிற்கு சென்று குற்றங்களை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.