'முதல் தடவ வெளிய வரவங்களுக்கு தண்டனை இருக்கு, ஆனால்...' 'மூணாவது தடவையும் வெளிய வந்து சிக்கினா...' 'நூதன' தண்டனையை அறிவித்த கிராம பஞ்சாயத்து...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 02, 2020 02:06 PM

ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்வோம் என மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து முடிவு செய்துள்ள சம்பவம் அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

New punishment for those who get out of the house

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் சூழலில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 2094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் 1866 பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல மாநிலங்களில் வீட்டை வீட்டு வெளியே வரும் மக்களுக்கு போலீசார் பல்வேறு வினோதமான  தண்டனைகளை கொடுத்து கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கேஜ் தாலுகாவில் உள்ள தகாலி கிராம பஞ்சாயத்து நூதன தண்டனையை அறிவித்து உள்ளது. கிராம பஞ்சாயத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இனி மாநில அரசின் உத்தரவை மீறி அத்யாவசிய தேவைகளை தவிர தெருக்களில் சுற்றி முதல் முறையாக சிக்கும் நபருக்கு   ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

அதை தொடர்ந்து ஒருவர் 3 முறை தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வந்தால் அந்த நபரை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்' என்று அறிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என கூறியுள்ளனர்.

Tags : #PUNISHMENT