'தம்பி உன்ன வேலையை விட்டு தூக்கியாச்சுன்னு சொன்னாங்க'... 'ஐயோ குடும்பம் இருக்கே என்ன பண்றதுன்னு இருந்தேன்'... ஆனா இப்படி ஒரு அதிசயம் நடக்கும்ன்னு நினைக்கல!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் வேலையிழந்து குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது எனத் தவித்த இளைஞரின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோட் பகுதியைச் சேர்ந்த நவனீத் சஞ்சீவன் என்ற 30 வயது இளைஞர். மனைவி மற்றும் குழந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். இதனிடையே கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், நவனீத் சஞ்சீவனை தொடர்பு கொண்ட அவரது நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்குவதாகக் கூறியுள்ளது. இதைச் சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நம்மை நம்பி குடும்பம் இருக்கிறதா இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்யப் போகிறோம் என புரியாமல் தவித்து வந்துள்ளார். இதையடுத்து கடன் வாங்கி குடும்பத்தை அவர் நடத்திய நிலையில், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுள்ளார். ஆனாலும் குடும்பத்தின் பணத் தேவையை அவரால் சமாளிக்க முடியவில்லை. இதனால் புதிய வேலைக்காக நாள்தோறும் வெவ்வேறு நிறுவனங்களில் நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இரு ஒரு புறம் இருக்க மறுபுறம் கடன் தொல்லை, பணநெருக்கடி எனக் கடுமையான மன உளைச்சலிலிருந்துள்ளார். இந்த நிலைமை தற்போது சரியாகாது, தற்போது புதிய வேலையும் கிடைக்காது என்பதை உணர்ந்த நவனீத் சஞ்சீவன், கடந்த நவம்பர் 22ம் தேதி DDF எனப்படும் துபாய் லாட்டரி வாங்கியுள்ளார். பின்னர் தனது வழக்கமான வேலையை அவர் பார்த்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் அந்த அதியசம் தற்போது நிகழ்ந்துள்ளது. நவனீத் சஞ்சீவன் வாங்கிய லாட்டரிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு மேலான தொகை பரிசாக விழுந்துள்ளது. கடுமையான மன உளைச்சலிலிருந்த அவர், தனக்கு லாட்டரில் பணம் விழுந்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். இதுகுறித்து பேசிய அவர், ''சோதனையான காலகட்டத்தில், லாட்டரியில் அடித்த ஜாக்பாட் தங்களின் வாழ்க்கையைக் கரைசேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே இருக்கும் 10 ஆயிரம் திர்ஹாம் கடனை அடைத்துவிட்டு எஞ்சிய பணத்தை உரிய முறையில் முதலீடு செய்வேன் என சஞ்சீவன் தெரிவித்துள்ளார். இந்த சோதனை காலத்தில் மனைவி தொடர்ந்து வேலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், தனக்கு வேலை கிடைக்கவில்லையென்றால் இந்தியாவுக்கே மீண்டும் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறிய சஞ்சீவன், லாட்டரி மூலம் இவ்வளவு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று முதலில் நம்பவில்லை'' எனக் கூறியுள்ளார்.
இதனிடையே துபாயைச் சேர்ந்த கலீல் ஜேக்கப் என்பவருக்கும் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. DDF எனப்படும் துபாய் லாட்டரி மூலம் பரிசுத் தொகை பெரும் 171-வது இந்தியர் என்ற சாதனைக்கும் நவனீத் சஞ்சீவன் சொந்தக்காரராக மாறியுள்ளார். அண்மையில், இந்தியத் தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலரும், துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு 12 மில்லியன் திர்ஹாமும் ஜாக்பாட் அடித்திருந்தது.
தற்போது 37வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள துபாய் லாட்டரியை அதிகளவு இந்தியர்கள் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, துபாயில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் வசிப்போரும் ஆன்லைன் மூலமாகத் துபாய் லாட்டரி வாங்குவது தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
