இளைஞரை மிரட்டி அடல்ட் வெப் சீரிஸ் எடுத்த இளம்பெண் இயக்குநர் கைது?.. பரபரப்பு பின்னணி.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் தன்னை மிரட்டி அந்தரங்க காட்சிகள் கொண்ட வெப் சீரிஸில் நடிக்க வைத்ததாக இளைஞர் ஒருவர் பெண் இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் அந்த பெண் இயக்குனர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி தீப்தா. இவர் நான்சி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற பெப்சிரிஸ்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் லட்சுமி தீப்தா தன்னை மிரட்டி அந்தரங்க காட்சிகள் கொண்ட வெப் சீரிஸில் நடிக்க வைத்து விட்டதாகவும் அந்த சீரியஸிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சமீபத்தில் இயக்குனர் லட்சுமி தீப்தாவிடம் வாய்ப்பு தேடி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் லட்சுமி தீப்தா தன்னிடம் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக அசைவார்த்தை கூறி பின்னர் அவர் இயக்கும் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் எனவும் அந்த தொடரின் படப்பிடிப்புகளில் பல நாட்கள் கலந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞர். மேலும் தன்னை அந்தரங்க காட்சியில் நடிக்க வற்புறுத்தியதாகவும் அதிர்ச்சி அடைந்து அதில் நடிக்க மறுத்ததாகவும் அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருப்பதாக கூறி தன்னை மிரட்டி நடிக்க வைத்ததாகவும் அந்த இளைஞர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து அருவிக்கரை போலீசார் இயக்குனர் லட்சுமி தீப்தா மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். இதனைத் தொடர்ந்து லட்சுமி தீப்தாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட லட்சுமி தீப்தாவை போலீஸார் நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த ஆறு வாரங்கள், புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணிவரை போலீஸ் அதிகாரி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், காவல்துறையினர் கேட்கும் தகவல்களை அளிக்கவேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் லட்சுமி தீப்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.