"'மேட்ச்' தோத்தா என்ன,,.. 'பையன்' சும்மா பட்டைய கெளப்புறான்... 'FUTURE'ல பெரிய ஸ்டாரா வருவான்..." இளம் வீரருக்கு குவிந்த 'பாராட்டு'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 189 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, ஆரம்பத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், மிடில் ஆர்டரில் கை கோர்த்த வில்லியம்சன் மற்றும் அப்துல் சமாத் ஆகியோர் ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிய நிலையில், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், டெல்லி அணியின் கையே இறுதியில் ஓங்கி பின் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் இளம் வீரர் அப்துல் சமாத் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். அதிலும் நோர்ஜே, ரபாடா ஆகியோரின் பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
Yes he should have won the game for @SunRisers but really proud of #abdulsamad for showing character and power game. #1stseasonofipl
— Irfan Pathan (@IrfanPathan) November 8, 2020
#samad showed a lot of promise I feel can be a special player in the future
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 9, 2020
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சமாதின் பேட்டிங்கை புகழ்த்தி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் கமெண்ட் செய்த மற்றொரு முன்னாள் வீரரான யுவராஜ் சிங், 'வருங்காலத்தில் சமாத் ஸ்பெஷல் வீரராக வருவார்' என நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, '100 சதவீதம் நான் ஒப்புக்கொள்கிறேன் யுவி' என குறிப்பிட்டுள்ளார்.
100% agree Yuvi
— Tom Moody (@TomMoodyCricket) November 9, 2020
இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.