'ஏடிஎம்-ல பணம் டெபாசிட் செய்தால் தனி கட்டணம்...' ஆனால் 'அந்த நேரத்துல' மட்டும் இலவசம்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல தனியார் வங்கி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவங்கியின் அலுவல் நேரம் அல்லாத மற்ற நேரங்களில் ஏடிஎம் மெஷின்களில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
ஐசிசிஐசி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வங்கியின் அலுவல் நேரம் அல்லாத மற்ற நேரங்களில், குறிப்பாக வார நாட்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலும், அதேபோல வங்கியின் விடுமுறை தினங்களிலும் ஏடிஎம் மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 50 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும் என்றும் இந்த புதிய நடைமுறை நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல, ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் டெபாசிட் செய்தால், அவற்றுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால், மூத்த குடிமக்களின் வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன்தன் வங்கி கணக்கு, மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு இந்த கட்டணம் விதிக்கப்படாது என்றும் ஐசிஐசிஐ வங்கி தெளிவுப்படுத்தி உள்ளது.
முன்னதாக ஆக்சிஸ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இதேப்போல் ஏடிஎம் டெபாசிட்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.