இறப்பதற்கு முன் மனைவிக்கு விவாகரத்து.. எதுக்காக தெரியுமா? வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர் செய்த நெகிழ்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர், தான் இறக்கும் முன்பாக தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து வழங்கியதுடன் அவருக்கு தேவையான பொருளாதார ரீதியான விஷயங்களையும் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மத் நகரை சேர்ந்தவர் 33 வயதான ஹர்ஷ்வர்தன். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஹேமா என்பவருடன் திருமணம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்த இவர், அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குதான் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அத்துடன் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து தன்னுடைய மனைவி மற்றும் பெற்றோரிடம் இந்த தகவலை ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு மனைவி குறித்து யோசித்த அவர் தன் மனைவி ஹேமாவுக்கு தேவையான பொருளாதார ரீதியான விஷயங்களை செய்து கொடுத்ததுடன் ஹேமாவுக்கு விவாகரத்தும் கொடுத்து விட்டார்.
மேலும் தன்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளையும், சுமார் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்படி கடந்த மார்ச் 24 ஆம் தேதி இறந்த ஹர்ஷ்வர்தனின் உடல் விமான மூலம் இந்தியா வந்தடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அவருக்கு இறுதி சடங்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.