"இப்படியா நடக்கணும்".. ஜிம்மில் உடற்பயிற்சிக்கு சென்ற ஹோட்டல் ஓனர் மாரடைப்பால் விழுந்து மரணம்!! தொடரும் அவலம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஜிம்மில் நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென நேர்ந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | நைட்டியில் வந்த திருடர்.. வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால்.. ஆத்திரத்தில் செஞ்ச அதிர்ச்சி காரியம்!!
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ரகுவன்ஷி. இவர் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவர் அப்பகுதியில் அமைந்துள்ள ஜிம் ஒன்றிற்கும் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி வழக்கம் போல, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார் பிரதீப் ரகுவன்ஷி. அந்த சமயத்தில், திடீரென யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. பிரதீப் அங்கே மயங்கி கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இதனைக் கண்டதும் ஜிம் பயிற்சியாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் பதறிப் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையிலும் அவர்கள் சேர்த்துள்ளனர். அப்போது, பிரதீப்பை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து போனதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில், பிரதீப் ரகுவன்ஷி ஜிம்மில் வைத்து கீழே மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
அந்த வீடியோவில், உடற்பயிற்சி செய்து விட்டு தனது ஜாக்கெட்டை பிரதீப் ரகுவன்ஷி கழற்றும் போது திடீரென மயங்கி கீழே விழும் காட்சிகள் பதிவாகி உள்ளது. சமீப காலமாக, ஏராளமானோர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதும் பிரதீப் ரகுவன்ஷியை போல ஒரு சிலர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்திருந்த விஷயம், கடும் பீதியையும் உண்டு பண்ணி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
