ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான தமிழக கிரிக்கெட் வீரர்! .. அப்படி என்ன செய்தார்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 05, 2019 08:56 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய தமிழக வீரரான விஜய் சங்கர் டிவிட்டரில் உலகளவில் டிரெண்டாகி உள்ளார்.

Vijay Shankar worldwide trending in twitter

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதில் ரோகித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். ஷிகர் தவான் 29 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து 4 -வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி, விஜய் சங்கர் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதில் கேப்டன் விராட் கோலி 116 ரன்கள் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி அடித்த 40 -வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய் சங்கர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் என 46 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போது திடீரென ரன் அவுட்டாகி விஜய் சங்கர் வெளியேறினார். விஜய் சங்கரின் இந்த பங்களிப்பு இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில், விஜய் சங்கரின் ஆட்டத்தை டுவிட்டரில் பலரும் பாராட்டினர். இதனால் அவர் டுவிட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலகளவில் 6 -வது இடத்திலும் இடம்பிடித்து அசத்தினார்.

Tags : #TEAMINDIA #INDVAUS #VIJAYSHANKAR #ODI #TRENDING