தலைவன் இருந்திருந்தா.. வீ மிஸ் யூ தோனி.. டுவிட்டரில் தெறிக்கவிட்ட‘தல’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 11, 2019 04:40 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில் தோனி விளையாடவில்லை, ஆனாலும் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி அசத்தியுள்ளார்.

MS Dhoni trending on twitter

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4 -வது ஒருநாள் போட்டி கடந்த மார்ச் 11 -ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது. இதில் விக்கெட் கீப்பர் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். மேலும் புவனேஸ்வர் குமார், சாஹல், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 358  ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரரான ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 115 பந்துகளில் 18 பவுண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 143 ரன்களை எடுத்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அதிரடியாக ஆடி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 358 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதில், விக்கெட் கீப்பரான ரிஷ்ப் பண்ட் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டை ஸ்டெம்பிங் செய்யும் போது தவறவிட்டார். இதனைக் குறிப்பிட்டு தோனியை இந்த தருணத்தில் மிஸ் பண்றோம் என பலரும் டிவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதனால் தோனியின் பெயர் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது.

 

Tags : #MSDHONI #INDVAUS #TRENDING