ராஜினாமா செய்தார் ஷிவ் நாடார்!.. HCL நிறுவனத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள்!.. என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 20, 2021 12:32 PM

HCL நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உடனடியாக இவரது ராஜினாமா அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hcl shiv nadar resings as md named chairman emeritus

1976ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ் நாடார் இந்த நிறுவனத்தை தொடங்கினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். தொழில்நுட்பத்துறையில் பல முன்னெடுப்புகளை HCL செய்திருக்கிறது.

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கு (NSE) தேவையான மென்பொருளை HCL வடிவமைத்தது. தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக HCL திகழ்கிறது.

HCL நிறுவனத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை ஷிவ் நாடார் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி  IBM நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வனிதா நாராயணன் HCL இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான், HCL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (Managing Director) பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஷிவ் நாடார் பதவி விலகலை தொடர்ந்து தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி (CEO) விஜயகுமார் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20-ம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார். அந்த பொறுப்பில் கடந்த ஓர் ஆண்டாக இவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டாலும், HCL நிறுவனத்தில் இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hcl shiv nadar resings as md named chairman emeritus | India News.