சூரிய புயல், பையோ வார்.. 2023 -ல இதெல்லாம் நடக்குமா..? பகீர் கிளப்பியதா பாபா வாங்காவின் கணிப்புகள்..?!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Dec 05, 2022 11:44 AM

எதிர்காலத்தை கணித்தவர் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் விஷயங்கள் குறித்து கணித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Bulgarian Mystic Baba vanga Prediction for 2023 reportedly

உலக அளவில் எதிர்காலத்தை ஓரளவு கச்சிதமாக கணித்தவர்கள் என மக்களால் நினைவுகூரப்படுபவர்கள் நாஸ்ட்ராடாமசும் பாபா வாங்காவும் தான். நாஸ்ட்ராடாமஸ் பிரான்ஸை சேர்ந்தவர். 1503 ஆம் ஆண்டு பிறந்த நாஸ்ட்ராடாமஸ் பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே கணித்ததாக சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் அடுத்து புகழ்பெற்றவர் பாபா வாங்கா.

பாபா வங்கா, வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பல்கேரியாவில் அக்டோபர் 3, 1911 இல் பிறந்தார். இவர் தன்னுடைய 12 ஆம் வயதில் இரு கண் பார்வைகளையும் இழந்தார். மணல் புயலில் சிக்கி இரு கண்பார்வையையும் இழந்ததாகவும் அதனால் எதிர்காலத்தை கணிக்கும் வரத்தை கடவுள் தனக்கு வழங்கியதாகவும் பலமுறை கூறியுள்ளார் பாபா வாங்கா.

Bulgarian Mystic Baba vanga Prediction for 2023 reportedly

இவர் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என கணித்ததாக கூறப்படுகிறது. அவரது குறிப்பில்,"எஃகு பறவைகளின் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க சகோதரர்கள் வீழ்வார்கள். ஓநாய்கள் புதரில் ஊளையிடும். அப்பாவிகளின் இரத்தம் வழியும்" என இருந்ததாக தெரிகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின்போது இந்த  தகவல்கள் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டது. அதேபோல, அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என வாங்கா கணித்தததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், உலகில் உள்ள அணு உலைகள் பாதிப்படைந்து அது பூமியில் சுற்றுவட்ட பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல, பூமி சூரியனுக்கு அருகில் சென்றால் கதிர்வீச்சு அதிகமாகி சூரிய புயல் வீசலாம் என அவர் கணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இயற்கையாக குழந்தை பிறப்பை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு, பெற்றோர்கள் ஆய்வகங்களில் தங்களுக்கு தகுந்தபடி குழந்தைகளை தேர்ந்தெடுக்கும்படியான நடைமுறைகள் வரலாம் என அந்த குறிப்பில் இருப்பதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து உயிரியல் போர் எனப்படும் பையோ வாரை உலகின் முக்கிய நாடு முன்னெடுக்கும் எனவும் இதனால் ஏராளமான மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் பாபா வாங்கா கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அணு உலை வெடிக்கும் எனவும் அந்த கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தின் பாதுகாப்புகள் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த கணிப்புகள் வெளியாகி இருப்பது உலக அளவில் பரப்பிரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : #BABA VANGA #PREDICTIONS #2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bulgarian Mystic Baba vanga Prediction for 2023 reportedly | World News.