"இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்".. எச்சரிக்கும் நிபுணர்.. இந்த இடங்கள்ல தான் வாய்ப்பு அதிகமாம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுருக்கி மற்றும் சிரியாவை தொடர்ந்து இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர். பூர்ணசந்திர ராவ் தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "சென்னை சேப்பாக்கத்துல தோனியும் ஜடேஜாவும் கால் வச்சா போதும் விசில் பறக்கும்" ..சின்ன தல ரெய்னா உருக்கம்..!
இந்தியாவின் இமயமலை பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதே வேளையில், அதனை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் அவர். இதுபற்றி அவர் பேசுகையில்,"பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் பல்வேறு தட்டுகளைக் கொண்டுள்ளது. இந்திய தட்டு வருடத்திற்கு சுமார் 5 செமீ நகர்கிறது, இதனால் இமயமலையில் அழுத்தம் குவிந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது." என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து பேசிய அவர்," உத்தரகாண்டில் 18 நில அதிர்வு வரைபட நிலையங்களின் வலுவான நெட்வொர்க் எங்களிடம் உள்ளது. இமாச்சல், நேபாளத்தின் மேற்கு பகுதி மற்றும் உத்தரகாண்ட் இடையே நில அதிர்வு இடைவெளி என குறிப்பிடப்படும் பகுதியில் எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அண்டை நாடுகளான சிரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 40000 ஐ கடந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனிடையே, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர். பூர்ணசந்திர ராவ் தெரிவித்திருப்பது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Hyderabad| Earth’s surface comprises various plates that are constantly in motion. The Indian plate is moving about 5 cm per year, leading to accumulation of stress along the Himalayas increasing the possibility of a greater earthquake: Dr N Purnachandra Rao, Chief Scientist,NGRI pic.twitter.com/YCwCInLcm8
— ANI (@ANI) February 21, 2023
Also Read | "பழைய பீரோவை வரதட்சணையா கொடுக்குறாங்க".. தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை.. மணப்பெண் அதிரடி முடிவு..!

மற்ற செய்திகள்
