இதுக்கு முன்னால 'யாரெல்லாம்' ஹெலிகாப்டர் விபத்துல இறந்துருக்காங்க...? - முழு விபரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளான தரைப்படை, கடற்படை, விமானப்படைகளின் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களுடன் பயணம் செய்த 13 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் ஒருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற எதிர்பாராத விமான விபத்துக்களில் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிந்துள்ளனர். அதில் முன்னாள் இந்திய பிரதமர்களான இந்திரா காந்தியின் மகனும் ராஜிவ் காந்தியின் இளைய சகோதரருமான சஞ்சய் காந்தியும் ஒருவர்.
சாகச விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வமுடையவரான சஞ்சய் கடந்த 1980ஆம் ஆண்டு டெல்லி ஃபிளையிங் கிளப்பின் புதிய விமானம் ஒன்றை இயக்கும் வேளையில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மாதவ் ராவ் சிந்தியா பயணம் செய்த விமானம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திர பிரதேச மாநிலத்தின் மணிப்புரி மாவட்டத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
மாதவ் ராவ் சிந்தியா 1971 ஆண்டில் தொடங்கிய அரசியல் பயணத்தில் ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட புகழுக்கு சொந்தக்காரர். அதோடு அவர் ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியடையாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பனிரெண்டாவது அவை தலைவரான GMC பாலயோகி, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கைகளூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு, ஆந்திர மாநிலத்தின் இரு முறை முதல்வர் பகுதியில் வகித்த ராஜசேகர ரெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு ருத்ரகொண்டா மலைப்பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சௌந்தர்யா கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களூரு அருகே நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில் காலமானார்.
பாரதிய ஜனதாவின் தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர மாநிலம் புறப்பட்ட சௌந்தர்யா ஹெலிகாப்டர் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.