'இந்திய மக்களின் இதயத்தில் குடிபுகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர்...' '200 கொரோனா நோயாளிகளை சுமந்து சென்றவர்...' - நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Oct 12, 2020 12:08 PM

200 க்கும் மேற்பட்ட தடவைகள் கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் இறுதியில் கொரோனா வைரசிற்கு பலியான சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

delhi ambulance driver carried 200 bodies died corona

டெல்லியில் இலவசமாக அவசரகால சேவைகளை வழங்கும் ஷஹீத் பகத் சிங் சேவா தளம் என்ற அமைப்பில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்தவர் ஆரிப் கான்.

48 வயதான இவர், வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினால்,கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் ஆம்புலன்சிலேயே தங்கி, கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவியும், உற்றார் இல்லாத உடல்களுக்கு அவரே இறுதிச்சடங்கும் செய்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

மக்களின் மேல் கருணை உள்ளம் கொண்ட அவரின் மகன் ஆசிப் (27)எட்டு மாதங்களாக வேலையில்லாமல் தவிக்கிறார். தன் தந்தை இழப்பு குறித்து கூறுகையில், “நான் இப்போது வீட்டை கவனித்துக் கொள்ளும் பொறுப்புடன் இருக்கிறேன். தந்தை இறந்த பிறகு, நிறைய நல்ல மனிதர்கள் மற்றும் அமைப்புகளும் பணத்தை திரட்டி எங்கள் குடும்பத்திற்கு உதவினர். எனக் கூறினார்.

தற்போது வரை ரூ .3.12 லட்சம் ஆசிப்பின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

அவரது அம்மாவிற்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சகோதரர்களால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதாக மகன் ஆசிப் தெரிவித்துள்ளார்.

சாதரணமாக வாடகை வீட்டில் குடியிருந்து பொதுமக்களுக்காக சேவை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரிப் நாட்டு மக்கள் இதயங்களில் குடிபுகுந்து விட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi ambulance driver carried 200 bodies died corona | India News.