'இதுவரை யாரும் பார்க்காத... ரோகித்தின் இன்னொரு முகம்'!.. 'டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக புதிய அவதாரம்'!.. அசந்து போன பயிற்சியாளர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டிகளுக்கான ரோகித்தின் பேட்டிங் வியூகங்கள் குறித்து பயிற்சியாளர் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தற்போது அசுர பலத்தில் உள்ளது.
கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. எனவே, அதே நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிட்ச்சானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாகும். ஆதலால், இங்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா தான் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதால் வெகு சீக்கிரமாக முதல் விக்கெட் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், ரோகித் சர்மாவின் தற்போதையை ஃபார்ம் குறித்து பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் விளக்கியுள்ளார்.
ரோகித் சர்மா தற்போது மிகவும் கண்ட்ரோலாக உள்ளார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை தவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் தனக்கென ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அவர் டெஸ்ட் பந்தை எதிர்கொள்ளும் விதத்தை வைத்து நாம் அதை தெரிந்துக்கொள்ளலாம். 2020ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஓப்பனராக அசத்தி வருகிறார்.
டி20 போட்டிகளில் ரோகித் சர்மா அற்புதமான ப்ளான்களை வைத்திருப்பார். ஆனால், டெஸ்ட் பந்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் முன்பு அவருக்கு சிக்கல் இருந்தது. அதில் தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது சிறப்பான தொடக்கத்தை கொடுக்கிறார். நிதானமாக களத்தில் செட் ஆகி பின்னர் பிட்ச்-இன் தன்மையை உணர்ந்து விளையாடுகிறார். ஒருநாள் மற்றும் டி20-ல் ரோகித் 100 ரன்களை கடந்துவிட்டால் அதன்பின்னர் அவரை தடுக்க முடியாது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தான் அவர் முதற்கட்டத்தில் உள்ளார் விரைவில் அதிரடி ரோகித்தை நாம் பார்ப்போம் எனக் கூறியுள்ளார்.