”மேற்கத்திய கலாச்சாரத்தால் அழியும் நம் வேத மரபு".. பசு அரவணைப்பு தினத்தை அறிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிப்ரவரி 14 ஆம் தேதி இனி பசு அரவணைப்பு தினம் கொண்டாட மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது விலங்குகள் நல வாரியம்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!
பொதுவாக பிப்ரவரி 14 ஆம் தேதி என்றால் பலருக்கு காதலர் தினம் தான் ஞாபகத்திற்கு வரும். அது தொடர்பான விஷயங்களும் சமூக வலை தளங்களில் வைரலாகும். இந்த சூழ்நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினம் கொண்டாட விலங்குகள் நல வாரியம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது என்பதை நாம் அறிவோம். மேலும் கால்நடை வளத்திற்கும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் மையப்புள்ளியாக பசு விளங்குகிறது. இயற்கையை அன்னை போல காப்பதாலும் மனித குலத்திற்கு பல நம்மைகளை அளிப்பதாலும் இதனை கோமாதா என்றும் காமதேனு என்றும் அழைக்கிறோம்.
Images are subject to © copyright to their respective owners.
மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேத மரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவினை நாம் அரவணைப்பதால் நல்ல உணர்வும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். ஆகவே, பசுக்களை விரும்பும் அனைவரும் பசு நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியை கருத்தில்கொண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்த அறிவிப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை, மீன் வளத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திலும் இந்த சுற்றறிக்கை பகிரப்பட்டுள்ளது.
Also Read | ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு