'கொரோனா'வால இறந்தவங்கள... ஒரே 'குழி'ல அசால்ட்டா போட்டுட்டு போறாங்க... 'பகீர்' கிளப்பும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஒரே இடத்தில் தூக்கி வீசி புதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பல லட்சம் பேர் இந்த தொற்று மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆனால், அதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உடலை அடக்கம் செய்ய எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல், கர்நாடக மாநிலம் பல்லாரி என்னும் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை ஒரே குழியில் சுகாதார பணியாளர்கள் வீசி செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரும் விவாதப் பொருளாக ஆகியுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் இது குறித்து உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். உரிய முறையில் கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்யாத நிலையில், வைரஸ் பரவக் கூடுமோ என்ற அச்சமும் மக்களிடையே உருவாகியுள்ளது.
It's disturbing to see bodies of COVID patients who have died being dumped inhumanly into a pit in Ballari.
Is this civility? This is a reflection of how the govt has handled this Corona crisis.
I urge the govt to take immediate action and ensure that this doesn't happen again. pic.twitter.com/lsbv5ZUNCR
— DK Shivakumar (@DKShivakumar) June 30, 2020