'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுhர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
இதில் மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8-ல் வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாது. அதே நேரம் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.