“அட இதிலிருந்து சிறை கைதிகளை மீட்கனும்”!... சிறைத்துறையினரின் புதிய முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | May 06, 2019 06:50 PM
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க சிறைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 14 மத்திய சிறைகள் உள்ளன. சிறைவாசிகளில் ஆயிரக்கணக்கானோர் போதை பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். மேலும்,அவ்வப்போது சிறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினாலும், சிறை வளாகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது.
இந்நிலையில், போதைப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் சிறைவாசிகள் நிலை மோசமடைவதாலும், அவ்வாறான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கடந்த மாதம் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவில் தேசிய சமூக பாதுகாப்பு நலத்துறையுடன் சிறைத்துறையினர் இணைந்து, சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில், சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக, சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
