கல்வெட்டில் பெயர் இல்லை.. ஷூ-வால் தாக்கி சண்டையிட்ட பாஜக எம்.பி., எம்.எல்.ஏ., பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 06, 2019 09:48 PM

கல்வெட்டில் தனது பெயர் இல்லை என பாஜக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. ஷூ-வால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP MP thrashes party MLA with shoe, Video goes viral on social media

உத்திரபிரதேசம் மாநிலம் கபீர் நகரில் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக உறுப்பினர்களும் அந்த தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சராத் திரிபாதி மற்றும் பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் சிங் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

அண்மையில் திறக்கப்பட்ட சாலை ஒன்றின் கல்வெட்டில் தனது பெயரைக் குறிப்பிடவில்லை என பாஜக எம்.பி. சரத் திரிபாதி முதலில் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து எம்.பி. சரத் திரிபாதி மற்றும் எம்.எல்.ஏ. ராகேஷ் சிங் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென எம்.பி. சரத் திரிபாதி தனது காலில் இருந்த ஷூவைக் கழட்டி எம்.எல்.ஏ. ராகேஷ் சிங் மீது கடுமையாக தாக்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. ராகேஷ் சிங் எழுந்து சென்று எம்.பி. சரத் திரிபாதியை திருப்பித் தாக்கினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.

உடனே அருகில் இருந்த காவலர்கள் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ., சண்டையை தடுத்தனர். கல்வெட்டில் பெயர் இல்லாத காரணத்துக்காக பாஜக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் பொது வெளியில் ஷூ-வால் அடித்து சண்டை போட்டுக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #BJP #MP #MLA #FIGHT #BIZARRE #VIRALVIDEOS