137-வது காங்கிரஸ் ஆண்டு விழா: ஏற்றும்போதே சோனியா கைகளிலேயே அவிழ்ந்து விழுந்த கொடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சிக் கொடியை சோனியா காந்தி ஏற்ற வந்த போது நிகழ்ந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ள சோனியா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக சோனியா வந்தார்.
அப்போது கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றிக் கொண்டு இருக்கும் போதே கொடி அவிழ்ந்து சோனியா காந்தியின் கரங்களிலேயே விழுந்தது. ஆனாலும், நிலைமையை சமாளித்து கட்சியின் பொருளாளர் பவன் பன்சால் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கொடியை தங்களது கைகளால் உயர்த்திக் காட்டினர். பின்னர் கொடிக்கு மரியாதை செலுத்தித் திரும்பினார் சோனியா காந்தி.
சோனியா காந்தி கட்சிக் கொடியை ஏற்றிக் கொண்டிருக்கும் போதே அவர் கைகளிலேயே கொடி அவிழ்ந்து விழுந்தது அங்கு சுற்றியிருந்த தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆண்டு விழா நாளில் கொடி அவிழ்ந்து விழுந்தது விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் ஆகத் திகழ்ந்து வருகிறார்.

மற்ற செய்திகள்
