"இதுதான் உண்மையான 'MEDICAL MIRACLE' போல",,.. பின்னாடி வழியா 'கம்பி' ஒண்ணு நுழைஞ்சு,,.. 'தோள்' வழியா வெளிய வந்துருக்கு, ஆனாலும்... வியந்து போன 'மருத்துவர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த போது, அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர், சுமார் 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த கம்பி ஒன்று பெண்ணின் உடலுக்குள் நுழைந்துள்ளது. கம்பியில் சிக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அங்கு பணிக்கு இருந்தவர்கள் கம்பியை அறுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த கம்பி பெண்ணின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
மருத்துவர்கள் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்ரமித்திருந்தாலும், அவரது முக்கிய உள் உறுப்புகளுக்கோ, அல்லது முக்கிய ரத்த குழாய்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதைக் கண்டு வியந்து போனார்கள்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிட்சையை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய நிலையில், அந்த பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தனை நீள கம்பி உடலுக்குள் நுழைந்தும், அந்த பெண் உண்மையாகவே உயிர் பிழைத்தது அதிசயம் தான் என்கின்றனர்.

மற்ற செய்திகள்
