'6 வயசுல இருந்தே தலைவலி...' 'கை கால் எல்லாம் மரத்து போயிருக்கு...' 'ஆனா பிரச்சனை தலைக்குள்ள உயிரோட இருந்த...' - விஷயம் தெரிஞ்சு மிரண்டு போன டாக்டர்ஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவை சேர்ந்த இளைஞரின் மூளையில் 17 ஆண்டுகளாக, 5 அங்குல நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் கண்டுபிடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவை செய்த சென் என்ற 23 வயதான இளைஞருக்கு சிறு வயதிலிருந்தே தலைவலி இருந்துள்ளது. மேலும் சென்னின் 6 வயது முதல் அவரின் கை மற்றும் கால்களில் உணர்வுகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சென்னின் உடல்நலம் குறித்து ஆர்வம் காட்டாத அவரின் பெற்றோர் இது ஒரு மரபணு பிரச்சனை என கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னின் உடலின் வலது பக்கம் முழுவதும் உணர்வு இல்லாமல் போயுள்ளது. மகனின் உடல்நலம் மிகவும் மோசமாகியதால் சென் குடும்பத்தார் மருத்துவமனையை நாடியுள்ளனர். அதையடுத்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு சென்னின் மூளையில் 5 அங்குல நீளமுள்ள புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து 2020-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
பல மணிநேர அறுவைசிகிச்சைக்கு பின் 17 ஆண்டுகளாக இளைஞரின் மூளையில் இருந்த 5 இஞ்ச் நீள புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
மேலும் இந்த நோய் sparganosis mansoni என அழைக்கப்படுகிறது எனவும், 2015-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் புழு இல்லாததால், 5 ஆண்டுகளுக்கு கழித்து அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.