'சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு'... 'முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா?'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் நோய் வேகமாகவே பரவி வருகிறது.
இந்நிலையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உலகை ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனா வைரஸ் பரவல் 8 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவிலுள்ள ஒரு சுரங்கத்தின் தொழிலாளர்களிடம் இருந்து முதல்முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 3 பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகள் ஏற்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களுக்கும் இதேபோல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இரண்டு நிபுணர்கள், தற்போது அது கொரோனா பரவலின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு நோய் பாதிப்பால் உயிரிழந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்ற ஒற்றுமை இருப்பதையும் நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.

மற்ற செய்திகள்
