வெலைய கேட்டா 'ஷாக்' அடிக்குது... 'மாற்று' வழியில் இறங்கிய மக்கள்... கோடிக்கணக்கில் நடந்த விற்பனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Aug 07, 2020 09:24 PM

இன்று காலைநேர நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.46 உயர்ந்து ரூ.5,420க்கும், சவரன் ரூ.368 உயர்ந்து ரூ.43360-கும் விற்பனையாகிறது. கடந்த ஒருவார காலமாக நாள் ஒன்றுக்கு சவரன் ரூ.400 வீதம் உயர்ந்து வருகிறது. 24 காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.56,910க்கு விற்பனையாகிறது. இதனால் மக்கள் தற்போது மாற்று வழிகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தங்க சேமிப்பு பத்திரத்துக்கு மக்களின் மத்தியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Postage Gold Savings Bond Sales increased in Lockdown

மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை குறைக்க தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை கடந்த 2015 ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்திய ரிசர்வ் வங்கி மூலம் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மூலம்  இந்த தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 24 கேரட் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்களில் ஒருவர் குறைந்த பட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக ஓராண்டில் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம்.

ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டித் தொகை வழங்கப்படும், எட்டு ஆண்டுகள் இதன் முதிர்வு காலம் ஆகும். இதில் தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை  87.71 கோடி ரூபாய்க்கு தங்க பத்திரம் விற்பனையாகியுள்ளது. ஆனால்  ஊரடங்கு காலத்தில் மட்டும் 31 கிலோ  என 15 கோடி ரூபாய்க்கு தங்க பத்திரம் விற்பனையாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் இதன் மீதான முதலீடு மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #CORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Postage Gold Savings Bond Sales increased in Lockdown | India News.