மாப்பிள்ளைக்கு 10 கண்டிஷன் போட்ட மணப்பெண்.. ‘அந்த 8-வது பாயிண்ட் வேறவெவல்’.. வைரலாகும் கல்யாண கட் அவுட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை அருகே திருமணத்துக்கு வைக்கப்பட்ட கட் அவுட்டின் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் கட் அவுட் வைத்திருந்தனர்.
மணமகள் மணமகனுக்கு கட்டளை இடுவதாக அவர்கள் அச்சடித்து வைத்த வசனங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அதில்,
1. உன்னுடைய மனைவி நான் ஆகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது.
2. அடுத்தவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.
3. இரவு 8:30 மணிக்கு கிச்சன் க்ளோஸ்.
4. இரவு 9:30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ்.
5 தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். தொந்தரவு செய்யக்கூடாது.
6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடு என்றாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.
8. சாயங்காலம் 6:30 முதல் 9:30 மணி வரை சீரியல் டைம். அந்த நேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. பச்சை தண்ணீர் கூட கிடையாது.
9. உறக்கத்தில் சத்தம் போடவோ, குறட்டை விடவோ கூடாது.
10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.
தற்போது இந்த திருமண கட் அவுட் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
