'சேலை கட்டிக்கொண்டு வந்து நின்ற மணமகன்'...'ஆச்சரியத்தைக் கொடுத்த வினோத திருமணம்'... சுவாரசிய பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 29, 2021 02:25 PM

ஆந்திராவில் நடந்த வினோத திருமணம் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

bride as groom, groom wear saree in prakasam Andhra Pradesh

தற்போது நடக்கும் சில திருமணங்கள் சற்று ஆச்சரியமாகவும், வினோதமாகவும் உள்ளது. அந்த வகையில் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி கிராமத்தில் நடந்த திருமணம் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.  அங்கையா- அருணா மணமக்களின் திருமணச்சடங்கு நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் மணமகன் அங்கையா பெண் போலச் சேலை அணிந்தும், மணமகள் அருணா ஆண் போல் குர்தா பைஜாமா உடை அணிந்தும் கிராம தேவதை கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்ற வீட்டுப்பெயர் கொண்ட குடும்பங்களில் இதுபோன்ற பாரம்பரிய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கையாண்டு வருகின்றனர்.

bride as groom, groom wear saree in prakasam Andhra Pradesh

மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும். இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride as groom, groom wear saree in prakasam Andhra Pradesh | India News.